ஓட்டமாவடி 1ஆம் வட்டரத்தைச் சேர்ந்த எம்.எல். ரைஹானா என்பவர் இன்று (09) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வபாத்தானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைகீ ராஜிவூன்.
இவர் ஓய்வுபெற்ற இலங்கை போக்குவரத்து சபை வாழைச்சேனை கிளையின் CTB முகாமையாளர் சனூஸ் என்பவரின் மனைவியும், ஓட்டமாவடி, கோறளைப்பற்று மேற்கு, பிரதேச சபையில் முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றும் முகம்மத் ரிழாவின் மாமியாரும், ஓட்டமாவடி பிரதான வீதியில் அமைந்துள்ள கஸீனா ரேடரஸ் உரிமையாளர் எம்.எல். சுபையிர் ஹாஜியார் மற்றும் ஓட்டமாவடி தாருல் உலூம் வித்தியாலய அதிபர் எம்.எல்.பைசல் ஆகியோரின் சகோதரியுமாவார்.
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை மஹ்ரிப் தொழகையின் பின் ஓட்டமாவடி முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
எச்.எம்.எம்.பர்ஸான்
No comments:
Post a Comment