போகத்துக்கு போகம் நெல்லின் உத்தரவாத விலையை அதிகரிக்க நடவடிக்கை - அமைச்சர் பீ. ஹரிசன் - News View

About Us

About Us

Breaking

Thursday, February 28, 2019

போகத்துக்கு போகம் நெல்லின் உத்தரவாத விலையை அதிகரிக்க நடவடிக்கை - அமைச்சர் பீ. ஹரிசன்

எதிர்வரும் காலங்களில் போகத்துக்கு போகம் நெல்லின் உத்தரவாத விலையை அதிகரிக்கவுள்ளதாக விவசாய, கிராமியப் பொருளாதார அலுவல்கள், பண்ணை வள அபிவிருத்தி, நீர்ப்பாசன மற்றும் மீன்பிடி மற்றும் நீர்வள அமைச்சர் பீ. ஹரிசன் அநுராதபுரம் நொச்சியாகம ஹெலபேவவில களஞ்சியமொன்றை திறந்து வைத்தபோது கூறினார். 

அங்கு அவர் தொடர்ந்து பேசுகையில், அன்றாடம் விவசாயத் தொழிலில் ஈடுபடும் விவசாயிகளுக்கு சில வேளைகளில் தொழிலாளர் மற்றும் இயந்திர உபகரணங்களுக்காக செலவிடப்படும் கூலிக்கான தொகை அதிகரித்து வருகின்றது.

அதனால், போகத்துக்கு போகம் நெல்லின் உத்தரவாத விலையை 02 ரூபாவாவது உயர்த்த வேண்டும். தற்போதுள்ள நெல்லின் உத்தரவாத விலை பேதுமானதல்ல. எதிர்கலத்தில் விவசாய சேவைகள் திணைக்களத்தினால் ஒவ்வொரு விவசாயிகளின் வீட்டிலும் நெல் களஞ்சியமொன்றை அமைக்க 5 இலட்சம் ரூபாவை 3% - 4% வரையான வட்டி வீதத்தில் பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். இதன்மூலம் ஆலை உரிமையாளர்களால் விவசாயிகள் சுரண்டப்படுவதை தடுக்க முடியுமெனவும் தெரிவித்தார். 

அநுராதபுர ஹெலபேவ களஞ்சியத்தை அமைக்க 250 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் விற்பனை சபைத் தலைவர் கஸ்தூரி அனுராதநாயக, நெல் விற்பனை சபையின் பொது முகாமையாளர் சமன் பாலித பண்டார, நொச்சியாகம பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டார்கள்.

No comments:

Post a Comment