அரச சேவை பதவியுயர்வு நடைமுறைக்குப் பதிலாக அரச பணியாளரின் ஆற்றல் மற்றும் திறன்களின் அடிப்படையிலான பதவி உயர்வு கட்டமைப்பை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரச நிர்வாக, இடர்காப்பு முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர், அரச சேவையில் பிரஜைகளை மதிப்பிட்டு, சுய விமர்சனம் செய்யும் புதிய வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் கூறினார்.
அரச சேவையை செயற்றிறன் மிக்கதாக மாற்றி மக்கள் நேய சேவையாக பரிணமிக்கச் செய்வது தமது அபிலாஷை என்றும் இதன் கீழ் பொறுப்பின் பெறுமதி என்ற தொனிப்பொருளில் அரச பணியாளர்களின் ஆற்றல்களை மதிப்பிடப் போவதாகவும் அரச நிர்வாக, இடர்காப்பு முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment