கம்பரெலிய வேலைத்திட்டத்தில் எந்தவித வேறுபாடுகளும் இன்றி அனைத்து பிரஜைகளுக்கும் அதன் மூலமான நன்மைகள் பெற்றுக் கொடுக்கப்படும் என்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
2019ம் ஆண்டுக்கான என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் மற்றும் கம்பெரலிய வேலைத்திட்டத்தை அறிமுகம் செய்யும் வைபவம் அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா என்ற வேலைத்திட்டத்தில் அரசாங்கம் நிவாரண வட்டியின் கீழ் கம்பெரலிய அபிவிருத்தி நடவடிக்கையின் மூலம் இலங்கை தொழில் முயற்சியாளர்களுக்கு பெரும் உந்துசக்தியாக அமைந்திருப்பதாக தெரிவித்தார்.
தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்க அரசாங்கம் இதன்மூம் எதிர்பார்த்துள்ளது. கம்பரெலிய வேலைத்திட்டத்தில் எந்தவித வேறுபாடுகளும் இன்றி அனைத்து பிரஜைகளுக்கும் அதன் மூலமான நன்மைகள் பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் கூறினார்.
ஒரு வருடத்தில் ஒரு இலட்சம் தொழில் முயற்சியாளர்களை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும். இந்த வேலைத்திட்டத்தின் நோக்கம் பொதுமக்களுக்கு கைகொடுப்பதே ஆகும். இதனை நிறைவேற்றும் வகையில் அனைத்து வங்கிகளும் செயற்பட வேண்டுமென்று அமைச்சர் மங்கள சமரவீர கூறினார்.
இந்த நிகழ்வில் அமைச்சர்களான அகில விராஜ் காரியவசம், கபீர் ஹாஷிம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.
அரசாங்க தகவல் திணைக்களம்
No comments:
Post a Comment