கடற்கரையில் எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 27, 2019

கடற்கரையில் எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிலிலுள்ள தாளங்குடா வேடர்குடியிருப்பு பிரதேசத்தில் எரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் இன்று (27) காலை மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். 

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான இன்று காலை தாளங்குட கடற்கரை பகுதியையண்டிய வேடர்குடியிருப்பு பிரதேசத்திலுள்ள காணி ஒன்றில் முற்றாக எரிந்த நிலையில் மண்டை ஓடு மற்றும் எலும்பக்கூடு கொண்ட சடலம் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். 

மீட்கப்பட்ட சடலம் 60 வயதுடைய பெண் ஒருவருடையது எனவும் குறித்த சடலம் தொடர்பில் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

மட்டக்களப்பு நிருபர் சரவணன்

No comments:

Post a Comment