திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்கட்டி பகுதியில் ஜெலிக்னைற் வெடி பொருட்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது செய்துள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று மாலை (09) இவ்வாறு சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு பேரில் மூன்று பேர் தப்பியோடிய நிலையில் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மூதூர் - பாலநகர் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது 262 கிலோ மீன்கள் கைப்பற்றப்பட்டதுடன், லொறி ஒன்றும், படகொன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இதன்போது 18 ஜெலிக்னைட் குச்சிகள் 06 டெட்டனேட்டர்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இதேவேளை தப்பியோடிய மூன்று பேரையும் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்றையதினம் (10) மூதூர் நீதவான் வாசஸ்தலத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.
அப்துல்சலாம் யாசீம்
No comments:
Post a Comment