உடபுஸ்ஸவ்வலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ருபஹ பகுதியில் நீரில் மூழ்கி பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். நேற்று (11) மாலை 3.45 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உடபுஸ்ஸவ்வலாவ, ருபஹ பகுதியை சேர்ந்த 14 வயதுடைய பசிந்து மதுரங்க எனும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். குறித்த மாணவன் நீரோடை ஒன்றில் விழுந்திருந்த நிலையில் தந்தையினால் கரைக்கு எடுத்தவரப்பட்டுள்ளார்.
குறித்த மாணவனை ருபஹ வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது அவர் உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த மாணவன் வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் உடபுஸ்ஸவ்வலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment