வெலிக்கடை சிறைச்சாலைக்குள் ஹெரோயின் போதைப்பொருளை கொண்டு செல்ல முற்பட்ட சிறைச்சாலை சார்ஜன்ட் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் ஏற்கனவே முன்னெடுக்கப்படும் விசாரணைகளைத் தவிர மேலதிகமாக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
வெலிக்கடை சிறைச்சாலைக்குள் ஹெரோயினைக் கொண்டு செல்வதற்கு முயன்ற போது சிறைச்சாலை சார்ஜன்ட் நேற்று கைது செய்யப்பட்டார். சந்தேகநபரிடமிருந்து 20 கிராம் ஹெரொயின் கைப்பற்றப்பட்டது.
No comments:
Post a Comment