யாழ்ப்பாணம் - மானிப்பாய் வீதியில் கேரளக் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தின் மேலதிக நீதவான் காயத்திரி சைலவன் முன்னிலையில் இன்று ஆஜர்ப்படுத்தியதை அடுத்து, எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தால் நேற்று முன்தினம் (30) மாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது மானிப்பாய் பள்ளிவாசல் வீதி பகுதியில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 41 கிலோ 530 கிராம் கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
மானிப்பாய் பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கும் அண்மையில் வல்வெட்டித்துறையில் பாரிய தொகை கேரளக் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கும் இடையில் தொடர்புகள் காணப்படுகின்றதா என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
No comments:
Post a Comment