இலங்கை பணத்தை கடத்த முற்பட்டவர் விமான நிலையத்தில் கைது - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 27, 2019

இலங்கை பணத்தை கடத்த முற்பட்டவர் விமான நிலையத்தில் கைது

ஒரு தொகை இலங்கை ரூபாக்களை சட்டவிரோதமாக சிங்கப்பூருக்கு கடத்திச் செல்ல முற்பட்ட இலங்கைப் பயணி ஒருவர் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

திருகோணமலை, தம்பலகாமம் பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய சிங்கப்பூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

இன்று அதிகாலை 03.30 மணியளவில் குறித்த நபர் சிங்கப்பூர் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்றில் செல்ல முற்பட்ட வேளை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 

இதன்போது சந்தேகநபர் கொண்டு வந்திருந்த பயணப் பொதியில் இருந்து 1000 ரூபா மற்றும் 5000 ரூபா நாணயத்தாள்கள் அடங்கிய 48 இலட்சத்து 99,000 ரூபா கைப்பற்றப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்கப் பிரிவினர் ஆரம்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment