களுத்துறை பகுதியில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டதால் கரையோர புகையிரத சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
புகையிரதத்தின் நான்கு பெட்டிகள் இவ்வாறு தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காலியில் இருந்து மருதானை நோக்கி பயணித்த புகையிரதமே இவ்வாறு களுத்துறை பகுதியில் தடம் புரண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
புகையிரத பாதையை சீர் செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் கரையோர புகையிரத சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment