பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசாங்கம் அலட்சியமாகச் செயற்படுகிறது - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 27, 2019

பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசாங்கம் அலட்சியமாகச் செயற்படுகிறது

பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசாங்கம் அலட்சியமாகச் செயற்பட்டு வருவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி. டெப்லிஸ்ட் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் குறித்து ஊடகங்களுக்கு நேற்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசாங்கத்தின் நகர்வு நடவடிக்கைகள் மிகவும் மெதுவான செயற்பாடுகளையே கொண்டிருக்கின்றன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா வெளியேறியுள்ள நிலையிலும், கடந்த காலத்தில் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டதன் அடிப்படையில் தொடர்ந்தும் அமெரிக்கா தனது ஆதரவினை வழங்கும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கடந்த அமர்வின் பிரேரணையில் உள்ள காரணிகள், இலக்குகளை பொறுப்புடன் அடைதல், நல்லிணக்கத்தினை ஏற்படுத்தல், உண்மைகளைக் கண்டறிதல் பொறிமுறை மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்களை கையாள வேண்டியது அவசியமானதாகும்.

இந்நிலையில் குறித்த இலக்குகளை அடைவதற்கு இலங்கை அரசாங்கம் அதிக கவனமெடுக்க வேண்டுமென்பதுடன், அதற்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் அமெரிக்கா வழங்கும்” என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி. டெப்லிஸ்ட் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment