ஜனநாயகம் குறித்து பேசுவோர், உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என, எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்தோடு ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து பழைய முறைமையிலாவது தேர்தலை நடத்த இணங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.
விஜேராமையில் உள்ள அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், உரிய காலப்பகுதியினுள் தேர்தல் நடத்தப்படும் எனக்கூறி ஆட்சியை கைப்பற்றிய அரசாங்கம் தற்போது மக்களின் எதிர்பார்ப்புக்களை சிதறடிப்பதாக குற்றம் சுமத்தினார்.
புதிய தேர்தல் முறைமை மூலம் சிறந்த நன்மைகளை பெறமுடியும் என்றும் அதற்கான செயற்பாடுகளை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்றும் அவர் விசனம் தெரிவித்தார்.
எனினும், அந்த நன்மைகளை தவிர்த்து ஜனநாயகத்திற்காக பழைய முறையில் தேர்தலுக்கு முகங்கொடுக்க தயாராகவுள்ளதாகவும், அதற்கு அரசாங்மும் தயாராக வேண்டும் என்றும், எதிர்க் கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment