சப்ரகமுவ தனியார் கல்வி நிலையங்களுக்கு புதிய நடைமுறை - ஆளுநர் தம்ம திஸாநாயக்க - News View

About Us

About Us

Breaking

Thursday, February 28, 2019

சப்ரகமுவ தனியார் கல்வி நிலையங்களுக்கு புதிய நடைமுறை - ஆளுநர் தம்ம திஸாநாயக்க

சப்ரகமுவ மாகாணத்தில் தனியார் கல்வி நிலையங்களுக்குச் செல்லும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், தனியார் கல்வி நிலையங்களின் தரத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அம்மாகாண ஆளுநர் தம்ம திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஆகையால், இம்மாகாணத்தில் இயங்கும் தனியார் கல்வி நிலையங்களை புதிய நடைமுறைக்குள் உட்படுத்தும் வகையில், மாகாணக் கல்வி அமைச்சில் அனைத்துத் தனியார் கல்வி நிலையங்களையும் பதிவு செய்வது கட்டாயமாக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ரம்புக்கனை சுஜாதா மகா வித்தியாலயத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டபோதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களிலுள்ள பாடசாலைகளில் வைக்கப்பட்டுள்ள பதாதைகள், சுவரொட்டிகளை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment