கிரிக்கெட்டை பாதுகாக்க ஊடகங்களும் ஒத்துழைக்க வேண்டும் : அர்ஜுன ரணதுங்க - News View

About Us

About Us

Breaking

Friday, February 1, 2019

கிரிக்கெட்டை பாதுகாக்க ஊடகங்களும் ஒத்துழைக்க வேண்டும் : அர்ஜுன ரணதுங்க

நாட்டின் பிரதான விளையாட்டான கிரிக்கெட்டை பாதுகாப்பதற்கு ஊடகங்களும் ஒத்துழைக்க வேண்டும் என, போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”நாட்டின் பிரதான விளையாட்டான கிரிக்கெட்டை பாதுகாத்து, வலுப்படுத்துவதற்கு எமது அரசாங்கம் போராடும்.

கடந்த காலத்தில் நிர்வாக செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள், கடந்த காலங்களில் கிரிக்கெட் விளையாடியவர்களை கூட இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவராக செயற்படுவதற்கு முடியாத வகையில் சட்டங்களை கொண்டு வந்துள்ளனர். அந்த சட்டத்தை முறியடிக்க விருப்பமின்றியே உப தலைவர் பதவிக்கு நான் போட்டியிடுகிறேன்.

வாக்கு பலமின்றி 20 வாக்குகளை கூட பெறாத ஒருவரே தேசிய பட்டியலினூடாக வந்து இன்று கிரிக்கெட்டை அழித்துள்ளார். இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஊடகங்கள் ஆதரவளிக்க கூடாது. அவற்றை சுட்டிக்காட்ட வேண்டும். அதற்கான பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு.

நாட்டின் பிரதான விளையாட்டை பாதுகாப்பதற்கு ஒரு சில திருடர்களை தவிர நாட்டிலுள்ள அனைவரும் விரும்புகின்றனர். அந்த வகையில் அதற்கான ஆதரவை ஊடகங்களும் வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment