அமைச்சர் றவூப் ஹக்கீம் தலைமையில் இலங்கை உயர் தொழிநுட்ப கல்லூரிகள் தொடர்பிலான கலந்துரையாடல் - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 27, 2019

அமைச்சர் றவூப் ஹக்கீம் தலைமையில் இலங்கை உயர் தொழிநுட்ப கல்லூரிகள் தொடர்பிலான கலந்துரையாடல்

ஆதிப் அஹமட் 
உயர் கல்வி அமைச்சின் கீழ் இயங்கி வருகின்ற உயர் தொழிநுட்ப கல்லூரிகளின் அபிவிருத்தி தொடர்பிலான கலந்துரையாடலொன்று நேற்றுமுன்தினம் (26) ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான றவூப் ஹக்கீம் தலைமையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன் போது உயர் தொழிநுட்ப கல்லூரிகளில் வழங்கப்படுகின்ற பாடநெறிகள் நவீன தொழிற்சந்தைக்கு முகம் கொடுக்க கூடியவாறான முறையில் அமைய வேண்டும் என்பதனை வலியுறுத்திய அமைச்சர் றவூப் ஹக்கீம். 

இது தொடர்பிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படியும் நவீன கற்கை நெறிகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், இலங்கை உயர் தொழிநுட்ப கல்லூரி கிளைகளின் பௌதீக தேவைப்பாடுகள் தொடர்பில் குழு ஒன்றினூடாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் இலங்கை உயர் தொழிநுட்ப கல்லூரியின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர். ஹேமபாலவுக்கு பணிப்புரை விடுத்தார்.

ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டுள்ள குருநாகல் மற்றும் சம்மாந்துறை ஆகிய உயர் தொழிநுட்ப கல்லூரி பிரிவுகளின் கட்டடங்களை மாணவர்களின் பாவனைக்கு கையளிப்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் றவூப் ஹக்கீம் இணைப்புச் செயலாளர் யு.எல்.எம்.என்.முபீன் ஆரையம்பதி கோவில் குளம் பிரதேசதத்தில் அமைந்துள்ள மட்டக்களப்பு உயர் தொழிநுட்ப கல்லூரி பிரிவு அபிவிருத்தி தொடர்பில் ஏற்கனவே பாசிக்குடா கால்ம் ஹோட்டலில் இடம்பெற்ற கலந்துரையாடலை நினைவூட்டி இந்த உயர் தொழிநுட்ப கல்லூரி பிரிவை தரமுயர்த்தப்பட வேண்டுமெனவும் அந்த கல்லூரிக்கான காணி ஒன்றினை கொள்வனவு செய்து கட்டடமொன்றினை அமைக்க அவசரமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த இலங்கை உயர் தொழிநுட்ப கல்லூரியின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர். ஹேமபால இந்த விடயம் தொடர்பாக தான் உடனடிக்கவனம் எடுப்பதாகவும் காணி சுவீகரிப்புக்கான அரசாங்க நடைமுறைகள் தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும் வாக்குறுதியளித்தார்.

இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், உயர் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் உடவளவ, இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர். மொஹான் டீ சில்வா, அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் நயீமுல்லாஹ், அமைச்சரின் உயர் கல்வி விடயங்களுக்காக இணைப்பதிகாரி மன்சூர் ஏ காதர் உள்ளிட பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment