தென் மாகாண சபை உறுப்பினர் கிரிசாந்த புஷ்பகுமார அக்மீமன பொலிஸ் நிலையத்தில் சட்டத்தரணி ஒருவர் ஊடாக ஆஜரானதையடுத்து கைது செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தென் மாகாண சபை உறுப்பினரான இவர் 'ரத்தரங்' என்று அறியப்படுகிறார்.
கடந்த 26ம் திகதி 16 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது. இன்று (28) அவர் காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.
No comments:
Post a Comment