பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம், இலங்கையின் சமாதானத்திற்காகவும், விடிவிற்காகவும் போராடிய இராணுவ வீரர்களை பழிவாங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம குற்றம் சுமத்தியுள்ளார்.
மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றம் என்ற பெயரில் இலங்கை இராணுவத்தினரை சர்வசேத்தில் காட்டிக்கொடுக்கும் முயற்சிகள் இடம்பெறுவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஜெனீவா அமர்வு, மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றம் குறித்து கருத்து தெரிவித்த போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “மனித உரிமை மற்றும் யுத்த குற்றச் சாட்டுக்கள் என்பன மஹிந்த தலைமையிலான கடந்த அரசாங்கத்திலேயே கொண்டுவரப்பட்டன.
ஆனாலும் எமது ஆட்சியில் நாம் இராணுவத்தை பழிகொடுக்க இடம்கொடுக்கவில்லை. ஆனால் தற்பொழுது பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய அதிகாரிகள் நாட்டில் யுத்த குற்றம் இடம்பெற்றதை ஏற்றுக் கொண்டுள்ளனர். இராணுவத்தினரைத் தொடர்ச்சியாக தண்டிக்கின்றனர்.
இலங்கையில் அரசியல்வாதிகள் பழிவாங்கப்பட்ட சந்தர்ப்பங்கள் இருந்தன. ஆனால் நாட்டிற்காகவும், நாட்டின் பாதுகாப்பிற்காகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இராணுவ வீரர்கள், மேலும் பல அதிகாரிகள் பழிவாங்கப்படுகிறார்கள்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment