மாகந்துர மதுஷ் உள்ளிட்ட 16 சந்தேக நபர்களும் இன்று துபாய் நீதிமன்றத்தில் ஆஜர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 27, 2019

மாகந்துர மதுஷ் உள்ளிட்ட 16 சந்தேக நபர்களும் இன்று துபாய் நீதிமன்றத்தில் ஆஜர்

துபாய் பொலிஸாரின் காவலில் உள்ள மாக்கந்துர மதூஷ் உள்ளிட்ட சந்தேகநபர்கள் 16 பேர் இன்று (28) அந்நாட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வாய்ப்புள்ளதாக சந்தேகநபர்கள் சார்பில் ஆஜராகியுள்ள சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளார்கள்.

கடந்த பெப்ரவரி நான்காம் திகதி துபாய் ஹோட்டலில் இரவு விருந்தொன்றின் போது கைது செய்யப்பட்ட சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரனான மாக்கந்துர மதுஷ் உள்ளிட்ட இந்நாட்டிற்கு தேவைப்படும் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் கலைஞர்களான அமல் பெரேரா, அவரது மகன் நதிமால் பெரேரா உள்ளிட்ட முப்பதுக்கும் அதிகமானோர் அன்றைய தினம் கைது செய்யப்பட்டார்கள்.

ஒரு மாத காலமாக இவர்கள் மீதான விசாரணை துபாய் பொலிஸார் மற்றும் அந்நாட்டு நீதிமன்றத்தை தொடர்பாடல் செய்யும் சட்ட வல்லுனர் அதிகாரியின் கண்காணிப்பின் கீழ் நடத்தப்பட்டது.

இக்காலகட்டத்தில் இவர்கள் தொடர்பாக இரத்த பரிசோதனை நடத்தப்பட்டு போதைப்பொருள் பாவித்ததாகக் கண்டு பிடிக்கப்பட்டார்கள். அதில் அமல் பெரேராவின் மகன், மதுஷின் மனைவி மற்றும் சிலரின் இரத்த மாதிரிகளில் போதைப்பொருள் கண்டு பிடிக்கப்படவில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய நபர்கள் தொடர்பாக அந்நாட்டு சட்டத்தின்படி நீதிமன்றில் ஆஜல்படுத்துவதா அல்லது இலங்கைக்கு அனுப்புவதா என முடிவு செய்வது மேலே குறிப்பிட்ட சட்ட ஆலோசனை அதிகாரிகளாவர்.

துபாய் பொலிஸாரால் சந்தேக நபர்களிடம் நடத்திய விசாரணை அறிக்கை அவ்வதிகாரியின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் பிரகாரம் அந்த அதிகாரியால் இந்த சந்தேக நபர்கள் துபாய் நீதிமன்றில் ஆஜர்படுத்தக் கூடிய நிலைமை காணப்படுவதாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது இங்கிருந்து துபாய் சென்றுள்ள சட்டத்தரணிகளின் ஒத்துழைப்புடன் சந்தேகநபர்கள் சார்பில் ஆஜராக அந்நாட்டு சட்டத்தரணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளார்கள். அங்குள்ள ஒரு சட்டத்தரணிக்காக இலங்கை ரூபாய்களில் இரண்டு கோடிக்கும் அதிகமான பணத்தை ஒரு தவணைக்காக செலுத்த நேரிடும் என தகவல்கள் கிடைத்துள்ளன.

இன்று அந்நாட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டால் முறைப்பாடு தொடர்பாக ஆரம்பிக்கப்பட்ட விசாரணை மாத்திரமே நடைபெறும் என்றும் மேலும் அங்கு விடுதலை செய்யக்கூடியவர்களை மாத்திரம் விடுதலை செய்து ஏனையோரை விளக்கமறியலில் வைத்து ஒரு வருடத்தின் பின்னர் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க இடமுள்ளதென கூறப்படுவதோடு அதற்குக் காரணமாக அவர்கள் கூறுவது தற்போது அந்நாட்டு நீதிமன்றத்தால் விசாரிக்கப்படுவது 2017ம் ஆண்டு முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கான வழக்குகளாகும் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment