கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் தலைவராக பேராசிரியர் ஜயசிங்கம் ஆளுநர் ஹிஸ்புழ்ழாவினால் நியமனம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 29, 2019

கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் தலைவராக பேராசிரியர் ஜயசிங்கம் ஆளுநர் ஹிஸ்புழ்ழாவினால் நியமனம்

கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆனைக்குழுவின் தலைவராக கிழக்கு பல்கலைக்கழகத்தினுடைய முன்னாள் உப வேந்தர் பேராசிரியர் தங்கமுத்து ஜயசிங்கம் அவர்களை கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி MLAM ஹிஸ்புழ்ழாஹ் இன்று (30) நியமித்துள்ளார்.

கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆனைக்குழு நியமனங்களை வழங்குதல், இடம் மாற்றங்களை செய்தல், உயர்பதவிகளுக்கு நபர்களை நியமித்தல் உட்பட அரச சேவைகளுடைய சகல நியமனங்களுக்கும் பொறுப்பான அதி உயர்சபையாகும் இந்த சபையின் தலைவராக பேராசிரியர் தங்கமுத்து ஜயசிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.

பேராசிரியர் தங்கமுத்து ஜயசிங்கம் மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தை சேர்ந்தவர்.

கிழக்கு பல்கலைக்கழகத்தில் உப வேந்தராக இருந்து கடமையாற்றிய நீண்ட கால அனுபவமிக்கவர், அவரை கிழக்கு ஆளுநர் அவர்கள் ஆணைக்குழுவின் தலைவராக நியமித்துள்ளார். 

இதுவரைகாலமும் இந்த ஆணைக்குழுவின் தலைவராக கொழும்பை சேர்ந்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி P.W.D.C ஜயதிலக்க அவர்கள் தலைவராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment