மாவனல்லை சிலை உடைப்பு - சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு - இருவரை கைது செய்ய விசாரணை தொடர்கிறது - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 2, 2019

மாவனல்லை சிலை உடைப்பு - சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு - இருவரை கைது செய்ய விசாரணை தொடர்கிறது

மாவனல்லை பிரதேசத்தில் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஏழு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாவனல்லை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏழு சந்தேகநபர்களும் கடந்த 26 ஆம் திகதி கைது செய்யப்பட்டதுடன், மேலும் இரண்டு சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

மாவனல்லை, தெல்கஹகொட பிரதேசத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தின் அண்ணன் தம்பி ஆகிய இருவரே இவ்வாறு பொலிஸாரால் தேடப்பட்டு வரும் சந்தேகநபர்களாவர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மாவனல்லைச் சம்பவம் மாத்திரமல்லாது, கம்பளை, பொல்கஹவெல உள்ளிட்ட பிரதேசங்களிலும் புத்தர் சிலை உடைப்பு சம்பவங்களுடன் தொடர்புபட்டிருப்பதாக பொலிஸார் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment