பிரித்தானிய பிரஜை நீர்வீழ்ச்சியில் சடலமாக மீட்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 2, 2019

பிரித்தானிய பிரஜை நீர்வீழ்ச்சியில் சடலமாக மீட்பு

லக்ஷபான நீர்வீழ்ச்சியில் நீராடிய வெளிநாட்டு பிரஜை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர். 

பிரித்தானிய நாட்டைச் சேர்ந்த கருப்பினத்தவரான 29 வயதுடைய ஓல்டி பூபோ இயய்பெம் ஒசுனியா என்பவரே இவ்வாறு நேற்று (01) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தனது காதலியுடன் இலங்கை வந்திருந்த குறித்த வெளிநாட்டு பிரஜை நோட்டன் பிரிட்ஜ் சப்தகன்னியா மலைத்தொடரை பார்வையிட்டபின் (01) மாலை 2 மணியளவில் லக்ஷபான நீர்வீழ்ச்சியில் நீராடிய போது சுழியில் சிக்குண்டு காணாமல் போன நிலையில் நோட்டன் பிரிட்ஜ் பொலிஸாரும் பிரதேச வாசிகளும் நீரோடையிலிருந்து சடலமாக மீட்டுள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதணைக்காக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார். முன்னெடுத்து வருகின்றனர். 

எம். கிருஸ்ணா

No comments:

Post a Comment