ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் கைதாகியுள்ள தீவிரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வாவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பான வழக்கு இன்று (02) கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது அவருக்கு எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் இவ்வழக்கின் மற்றுமொரு சந்தேகநபரான இந்திய நாட்டவருக்கும் எதிர்வரும் ஜனவரி 16 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த வழக்கு தொடர்பில் ஊழல் தடுப்பு படையணி எனும் அமைப்பின் செயற்பாட்டு பணிப்பாளர் நாமல் குமாரவினால் ஆதராமாக வழங்கப்பட்ட கையடக்க தொலைபேசியிலிருந்து அழிக்கப்பட்ட தொலைபேசி உரையாடல்கள் பல மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் குற்றவியல் திணைக்கள அதிகாரிகள் கடந்த நீதிமன்ற அமர்வில் (19) அறிவித்திருந்தனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் கடந்த ஒக்டோபர் 25 ஆம் திகதி முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment