கடற்படைக்கு பயந்து ஆற்றில் குதித்த இரண்டாமவரின் சடலமும் மீட்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 30, 2019

கடற்படைக்கு பயந்து ஆற்றில் குதித்த இரண்டாமவரின் சடலமும் மீட்பு

திருகோணமலை, கிண்ணியா கங்கை பாலத்துக்கு அருகில் காணாமல் போன இளைஞர்கள் இருவரில் இரண்டாமவரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

நேற்றையதினம் (29) சட்ட விரோத மணல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்களை கடற்பனையினர் கைது செய்யச் சென்ற வேளையில் துப்பாக்கி சூட்டிற்கு தப்பிப்பதற்காக கங்கை ஆற்றில் குதித்து காணாமல் போன இண்டாவதுவது நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் இடிமன், கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதான முகம்மது பசீர் றமீஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலத்தை பிரதே பரிசோதனைக்காக கிண்ணியா தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் காணாமல்போன இருவரில் ஒருவரான கிண்ணியா, இடிமன் பகுதியைச் சேர்ந்த முகம்மது ரபீக் முகம்மது பாரிஸ் (22) என்பவரின் சடலம் நேற்று (29) இரவு மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அப்துல்சலாம் யாசீம்

No comments:

Post a Comment