ஜனாதிபதியின் நஞ்சற்ற உணவு உற்பத்தி வேலைத் திட்டத்திற்கமைய கிராமங்கள் தோறும் மக்களை விழிப்பூட்டும் நிகழ்வு நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது.
இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட தேசிய உர செயலகத்தின் ஏற்பாட்டில் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஓமடியாமடு பல்தேவைக் கட்டடத்தில் நஞ்சற்ற உணவு பழக்கத்தை அதிகரிக்கும் வகையில் கருத்தரங்கு இடம்பெற்றது.
தேசிய உர செயலகத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் கே.எல்.எம்.சிராஜதீன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந், மட்டக்களப்பு மாவட்ட காப்புறுதி சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் சி.சிவாகரன், கிராம உத்தியோகத்தர் செ.தேவேந்திரன் உட்பட விவசாயிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது தேசிய உர செயலகத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் கே.எல்.எம்.சிராஜதீன், வாகரை விவசாய திணைக்களத்தின் விவசாய போதனாசிரியர் எஸ்.பிரபாகரன் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டு கருத்துக்களை வழங்கினர்.
கிருமி நாசினிகள் பாவனையால் ஏற்படும் நேரடி தாக்கம் மற்றும் மறைமுக தாக்கம் தொடர்பாகவும், கூட்டுப்பசளை பாவிப்பதால் ஏற்படும் நன்மைகள் தொடர்பாகவும் மக்களுக்கு விழிப்பூட்டப்பட்டு வருகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலகங்களிலும் கிரமங்கள் தோறும் நஞ்சற்ற உணவு உற்பத்தி தொடர்பாக விழிப்பூட்டல் நடைபெற்று வருகின்றது.
எஸ்.எம்.எம்.முர்ஷித்
No comments:
Post a Comment