என் மீதும் நான் சார்ந்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மீதும் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கலாள் மேற்கொள்ளப்படும் பொய் குற்றச்சாட்டே கடந்த 27.12.2018ம் திகதி இடம் பெற்ற சபை அமர்வில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டே தவிர அதில் எந்தவித உண்மையும் இல்லை என்று கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி தெரிவித்தார்.
ஓட்டமாவடி பிரதேச சபையில் கடந்த வருடத்திற்கான இறுதி அமர்வு 27.12.2018 அன்று இடம் பெற்ற போது சபையின் உறுப்பினர் எம்.எம்.ஹனீபா என்பவர் சபை அமர்வுகளில் கலந்து கொள்ளாமல் அவரது சம்பளம் தவிசாளரினால் எடுக்கப்பட்டுள்ளது என்று சபையின் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் சார்பான சுயேட்சை குழு உறுப்பினர்கலால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டிற்கு எதிராகவும் அக் குற்றச்சாட்டு உண்மைக்கு புரம்பானது என்றும் ஊடகவிலாளர் மாநாட்டில் இன்று சபையின் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி தெரிவித்தார்.
ஓட்டமாவடி பிரதேச சபை மண்டபத்தில் இன்று (02.01.2019) புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே பிரதேச சபை தவிசாளர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், குறித்த குற்றச்சாட்டு தொடர்பாக குறித்த 27.12.2018 அன்று ஊடகங்களிலும் இணையதளங்களிலும் செய்தி வெளியாகி இருந்த போதும் குறித்த குற்றச்சாட்டோடு தொடர்புடைய சபை உறுப்பினரான எம்.எம்.ஹனீபா என்பவர் வெளிநாட்டுக்கு தனிப்பட்ட பயணம் ஒன்று மேற்கொண்டு இருந்ததால் அவரது வருகையின் பின்னரே நடத்த வேண்டிய நிலையிருந்தது.
சபையின் உறுப்பினர் ஒருவர் சபை அமர்வுகளுக்கு தொடர்ந்து மூன்று கூட்டங்களுக்கு வருகை தராத பட்சத்தில் சபையின் செயலாளரினால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் அதனை விடுத்து குறித்த சபை உறுப்பினர் சபைக்கு வருகைதராதபோத அவரது கையொப்பத்தையிட்டு சம்பளத்தை பெற்றுக்கொண்டது என்பது உண்மைக்கு புறம்பானது.
சபை ஆரம்பிக்கப்பட்டு ஒன்பது அமர்வுகள் இடம்பெற்றுள்ளது அதில் சபை உறுப்பினர் வரவு புத்தகத்தில் ஏழு கூட்டத்திற்கு வருகைதந்துள்ளதாக கையொப்பம் இட்டுள்ளார் இரண்டு கூட்டங்களுக்கு வருகைதரவில்லை அதற்கான கொடுப்பணவு வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
எஸ்.எம்.எம்.முர்ஷித்
No comments:
Post a Comment