உலக ஆணழகர் சம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற லூசியன் புஷ்பராஜ், முன்னாள் ஜனாதிபதியும், எதிர்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேசியுள்ளார்.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுன முன்னணியின் அலுவலகத்தில் இன்றைய தினம் (04) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
“உலக ஆணழகர் சம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற லூசியன் புஷ்பராஜை சந்தித்தமை மகிழ்ச்சியளிக்கின்றது. இவர் எமது நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இவர் தொடர்பில் நாம் பெருமிதமடைகின்றேன். எதிர்காலத்தில் இவர் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிபெற வாழ்த்துகின்றேன்“ என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அண்மையில் தாய்லாந்தில் உலக உடற்கட்டு, உடல்வாகு விளையாட்டு சம்மேளனத்தின் 10ஆவது உலக சம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
இதன்போது, 100 கிலோகிராம் எடைக்கு மேற்பட்டவர்கள் பிரிவில் பங்கேற்ற லூசியன் புஷ்பராஜ் உலக கட்டழகராக தெரிவாகி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment