மட்டக்களப்பு மாவட்டத்தின், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட மீராவோடை ஆற்றில் மீனவரின் வலையில் முதலையொன்று சிக்கியுள்ளது.
இவ் விடயம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் நேற்றிரவு (02) மீன்களைப் பிடிப்பதற்காக ஆற்றில் வலைகளை கட்டி வைத்துள்ளார். கட்டி வைக்கப்பட்ட வலைகளை மீண்டும் எடுப்பதற்கு இன்று (03) அதிகாலையில் சென்று பார்த்தபோது மீன்வலையில் இறந்த நிலையில் முதலையொன்று சிக்கியுள்ளதைக் கண்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் ஓட்டமாவடி பிரதேச செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதோடு அப்பிரதேசத்தில் இவ்வாறு அகப்பட்ட முதலையைப் பார்ப்பதற்கு பெருந்திரளான மக்கள் வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.
எச்.எம்.எம்.பர்ஸான்
No comments:
Post a Comment