கல்வி கற்பதற்கு மாணவ, மாணவிகள் மத்தியில் போட்டியிருக்க வேண்டும் ஆனால் பொறாமையிருக்கக் கூடாது என்று மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விக்குட்பட்ட பாடசாலையான வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய அதிபர் எம்.ரீ.எம்.பரீட் தெரிவித்தார்.
2019 ஆம் கல்வியாண்டுக்கான பாடசாலை ஆரம்ப நாளான நேற்று (2) ஆம் திகதி விசேட காலை ஆராதனை நிகழ்வு இடம்பெற்றது அதில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் அங்கு பேசுகையில், ஒரு மாணவி பாடங்களில் கூடுதல் புள்ளிகளைப் பெற்றுக் கொண்டால் அவ்வாறு நானும் கூடுதல் புள்ளிகளைப் பெற வேண்டும் என்று போட்டிபோட்டு ஏனைய மாணவிகளும் பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும்.
எனவே மாணவிகளாகிய நீங்கள் தெரியாத விடயங்களை தெரிந்து கொண்டு திரும்பத்திரும்ப கற்றுக் கொள்ள வேண்டும் வகுப்புகளில் அதிகூடிய புள்ளிகளை பெற்றுக் கொள்ளுகின்ற மாணவிகளுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள்தான் உங்களுக்கும் கற்பிக்கின்றார்கள் ஆகவே நீங்கள்தான் ஆர்வத்தோடு கற்றுக் கொள்ள வேண்டும்.
அன்பின் மாணவிகளே எதிர்வரும் காலங்களில் சிறந்த முறையில் உங்களது கல்வி நடவடிக்கைகளைத் தொடர வேண்டும் பெண் மாணவிகளாகிய உங்களுக்கு கல்வி கற்க கூடுதல் நேரமுள்ளது எல்லா நேரங்களையும் நீங்கள் கற்றல் நேரங்களுக்குப் பயன்படுத்துங்கள்.
எனவே நீங்கள் சிறந்த பிள்ளைகளாக வாருங்கள் அல்லாஹ்வின் உதவியோடு உங்களது எதிர்காலம் நல்லவைகளாக அமைய வேண்டும் நீங்கள் அனைவரும் நல்ல புத்திசாலிகளாக வரவேண்டும் இந்த நாட்டிக்கும், சமூகத்திற்கும், பாடசாலைக்கும் சிறந்தவர்களாகவும், நற்பிரஜைகளாகவும் வரவேண்டும் அத்தோடு இஸ்லாம் கூறும் உத்தமிகளாக நீங்கள் வரவேண்டும் என்று தெரிவித்தார்.
எச்.எம்.எம்.பர்ஸான்
No comments:
Post a Comment