தொழிலற்ற இளைஞர்-யுவதிகளுக்கான தொழில் நிலையம் திறந்து வைப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 30, 2019

தொழிலற்ற இளைஞர்-யுவதிகளுக்கான தொழில் நிலையம் திறந்து வைப்பு

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள தொழிலற்ற இளைஞர்-யுவதிகளுக்கான தொழில் வாய்ப்பினை ஏற்படுத்தும் தொழில் நிலையமொன்றினை பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் நேற்று (29) பட்டிப்பளை பிரதேச செயலக வளாகத்தில் திறந்து வைத்தார்.

ப்ரண்டினா நிறுவனத்தின் அனுசரனணயோடு குறித்த தொழில் இல்லம் திறந்து வைக்கப்பட்டது.

பிரதேச செயலகப் பிரிவில் வாழும் இளைஞர், யுவதிகள், குறித்த நிலையத்தில் உள்ள மனிதவள அபிவிருத்தி, திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை அணுகி பதிவினை மேற்கொண்டு தொழிலினை பெற்றுக்கொள்ள கூடிய வகையில் இத்தொழிநிலைய செயற்பாடுகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையத்தின் ஊடாக தொழில் தேடுபவர்கள், தொழில் வழங்குநர் இருசாராரும் இணைக்கப்படவுள்ளதுடன், தொழில் வாய்ப்பு, தொழில் வழிகாட்டல் போன்றனவும் செய்யப்படவுள்ளன.

இந் நிகழ்வில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஸ், உதவி பிரதேச செயலாளர் அருணன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் செ.பிரபாகரன், நிர்வாக உத்தியோகத்தர் த.துரைராஜ், ப்ரண்டினா நிறுவனத்தின் முகாமையாளர் தினேஷ்உட்படபலர்கலந்து கொண்டிருந்தனர்.

வ. சக்திவேல்

No comments:

Post a Comment