மினுவாங்கொடை - கல்லொழுவை, அல் - அமான் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 2019 ஆம் ஆண்டிற்கான இல்ல விளையாட்டுப் போட்டிகள், கடந்த வாரம் இடம்பெற்றன. இதில், இஸ்தான்புல் (பச்சை), குருதுபா (நீலம்), பக்தாத் (சிவப்பு) ஆகிய மூன்று இல்லங்கள் கலந்து கொண்டன.
3 கிலோ மீற்றர் 200 மீற்றர் தூரம் கொண்ட மரதன் ஓட்டப் போட்டியில், இஸ்தான்புல் இல்லம் 1 ஆம், 2 ஆம் இடங்களைத் தனதாக்கிக் கொண்டது. குர்துபா இல்லம் 3 ஆம் இடத்தைப் பெற்றுக்கொண்டது. இதில், எம். சதாம், எம். சாபிரீன் ஆகியோர் 1 ஆம், 2 ஆம் இடங்களையும், எம்.ஜே.எம். றிஸ்கான் 3 ஆம் இடத்தையும் சுவீகரித்துக்கொண்டனர்.
கிரிக்கெட் போட்டியில், இஸ்தான்புல், பக்தாத், குர்துபா ஆகிய இல்லங்கள் முறையே 1 ஆம், 2 ஆம், 3 ஆம் இடங்களைக் கைப்பற்றிக்கொண்டது. 16, 20 வயதுக்குக் கீழான கரப்பந்தாட்டப் போட்டிகளில் பக்தாத் இல்லம் வெற்றியீட்டியது.
தனி நபர் பூ பந்தாட்டப் போட்டியில் (14 வயதின் கீழ்) பக்தாத் இல்லத்தைச் சேர்ந்த எம்.ஆர்.எப். ஸஹ்லா, (16 வயதின் கீழ்) இஸ்தான்புல் இல்லத்தைச் சேர்ந்த எப்.எம்.எப். சும்ரா, (18 வயதின் கீழ்) இஸ்தான்புல் இல்லத்தைச் சேர்ந்த எம்.என்.எப். நஸ்லா, (20 வயதின் கீழ்) இஸ்தான்புல் இல்லத்தைச் சேர்ந்த ஆர். ரபீகா சஜானி ஆகியோர் முதலாம் இடங்களை, தம் வசமாக்கிக் கொண்டனர்.
ஏனைய போட்டிகள் யாவும், பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி பிற்பகல் ஒரு மணி முதல், அதிபர் எம்.ரீ.எம். ஆஸிம் தலைமையில், கல்லொழுவை - அழுத்மாவத்தை வீதி, முனாஸ் ஹாஜியார் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளன.
ஐ. ஏ. காதிர் கான்
No comments:
Post a Comment