வடக்கு - கிழக்கு மாகாணங்களில் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த அரசாங்கம் தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 30, 2019

வடக்கு - கிழக்கு மாகாணங்களில் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த அரசாங்கம் தீர்மானம்

வடக்கு மற்றும் கிழக்கு மகாணங்களில் மீள்குடியமர்வு பணிகளை துரிதமாக முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக தேசிய கொள்கை பொருளாதார அலுவல்கள் மீள்குடியமர்வு மற்றும் புனர்வாழ்வு வட மாகாண அபிவிருத்தி தொழில் பயிற்சி மற்றும் திறன் ஆற்றல் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (29) சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மோதலின் காரணமாக பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள வடக்கு கிழக்கு மாகாணங்களில் மீள்குடியமர்வு பணிகள், நிலையான இயற்கை கழிவறை சுகாதார வசதிகள், நீர்விநியோகம், வீதிகள் மற்றும் மின்சார தொடர்புகள் போன்ற உட்கட்டமைப்பு அடிப்படை வசதிகளுடன் கல்வி மற்றும் சுகாதார வசதிகள் நிறுவப்படுவதையும் துரிதமாக மேற்கொள்வதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. 

இதற்கமைவாக வீட்டு உரிமையாளரினால் நிர்மாணப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய வீட்டு வேலைத்திட்டத்தின் கீழ் 4750 வீடுகளை நிர்மாணிப்பதற்கும் அமைச்சரவை அனுமதியளித்திருக்கிறது.

இதேவேளை இந்த பிரதேசத்திற்கு தேவையான பொருளாதார சமூக அடிப்படை வசதிகளை மேமப்படுத்துவதற்கும் பனையுடன் தொடர்புபட்ட தொழிற்துறையை மேம்படுத்துவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

No comments:

Post a Comment