ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் நேற்று வவுனியா விஜயம் - News View

About Us

About Us

Breaking

Friday, January 4, 2019

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் நேற்று வவுனியா விஜயம்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களான வில்லியம் டார்ட் மவுத் மற்றும் ஜியோஃப்ரே வான் ஓர்டன் ஆகியோர் நேற்று வவுனியா மாவட்ட செயலகத்திற்கு சென்றதுடன், மீள்குடியேற்றம் செய்யப்பட்ட இடங்களையும் பார்வையிட்டனர்.

இதன்போது வவுனியா மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் கலந்துரையாடல் நடைபெற்றது.

ஜரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாட்டின் பல பாகங்களுக்கும் விஜயம் மேற்கொண்டு இலங்கையில் அபிவிருத்தித் திட்டங்கள், யுத்தத்திற்கு பின்னரான நிலமைகள் தொடர்பாக பார்வையிட்டு வருகின்றனர்.

அந்தவகையில் வவுனியா மாவட்டத்தின் அபிவிருத்திப்பணிகள் தொடர்பாக கேட்டறியும் கலந்துரையாடலில் கலந்து கொண்டு பிரதேச செயலாளர், திணைக்களத் தலைவர்களை சந்தித்து மாவட்டத்தின் அபிவிருத்திப்பணிகள் தொடர்பாக கேட்டறிந்தனர்.

இக் கலந்துரையாடலை நிறைவுசெய்து மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்ட சிதம்பரநகர் பகுதிக்கு நேரடியாக விஜயம் மேற்கொண்டு அங்குள்ள மக்களைசந்தித்து நிலைமைகளை ஆராய்ந்தனர்.

No comments:

Post a Comment