ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக தயாசிறி ஜயசேகர நியமனம் - News View

About Us

About Us

Breaking

Thursday, January 3, 2019

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக தயாசிறி ஜயசேகர நியமனம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.

இந்த கூட்டத்தின் போதே சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலராக தயாசிறி ஜயசேகர நியமிக்கப்பட்டார் என்று கட்சியின் மூத்த உறுப்பினர் நிசாந்த முதுகெட்டிகம தெரிவித்தார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக ரோகண லக்ஸ்மன் பியதாஸ கடந்த ஜூன் மாதம் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் 6 மாதங்கள் மட்டுமே அந்தப் பதவியில் நீடித்த நிலையில் புதிய பொதுச் செயலாளர் இன்று நியமிக்கப்பட்டார்.

No comments:

Post a Comment