ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்ரசின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தெளபீக் அவர்களின் தொடர் முயற்சியினால் நேற்று (01) நடைபெற்ற அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் ஒன்று கூடலின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களால் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் நியமனத்தை விரைவாக வழங்க கோரி கல்வியமைச்சர் அகிலவிறாஜ் காரியவசம் அவர்களுக்கு பணிப்புரை கடிதம் வழங்கப்பட்டது.
அகில இலங்கை தெரிவு செய்யப்பட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர் சங்கம் சார்பாக விளையாட்டு பயிற்றுவிப்பாளர் நியமனத்தை விரைவாக வழங்க வேண்டும் அதற்காக கல்வியமைச்சரிற்கு பணிப்புரை விடுக்க வேண்டுமென கோரி கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தெளபீக் ஊடாக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்ரஸ் தலைவர் அமைச்சர் ரவுப் ஹக்கீம் அவர்களுக்கு மகஜர் கையளிக்கப்பட்டது.
குறித்த சந்திப்பின் போது நியமன தாமதத்தால் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களாக தெரிவு செய்யப்பட்ட 3850 இளைஞர், யுவதிகள் எதிர் நோக்கியுள்ள சிரமங்கள் பற்றி கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தெளபீக் அவர்களிடம் அகில இலங்கை தெரிவு செய்யப்பட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர் சங்கத்தினால் எடுத்துக் கூறப்பட்டது.
எமது கோரிக்கையையும், நியமன தாமதத்தால் 3850 இளைஞர், யுவதிகள் எதிர் நோக்கி இருக்கும் கஷ்டங்களையும் உணர்ந்து தன்னுடைய வேலைப்பளுக்களுக்கு மத்தியிலும் தெரிவு செய்யப்பட்டோரிற்கு தன்னால் முடியுமான முயற்சிகளை செய்து வருகின்றார் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தெளபீக் அவர்கள். ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்ரஸ் தலைவர் அமைச்சர் ரவுப் ஹக்கீம் அவர்களின் நேரடி பார்வைக்கு எமது கோரிக்கை மகஜரை கொண்டு சென்றதன் பிரதிபலனாக இன்று அமைச்சர்களின் ஒன்று கூடலின் போது கல்வியமைச்சரிற்கு பணிப்புரை கடிதம் வழங்கப்பட்டது.
விரைவில் நியமன இழுபறி பிரச்சினை தீர்க்கபட வேண்டும், தெரிவு செய்யப்பட்ட 3850 இளைஞர் யுவதிகளின் எதிர்கால வாழ்வு சிறக்க வேண்டும்,விளையாட்டு துறையில் அவர்கள் சாதித்தவைகளுக்கு வெகுமதியாக நியமனம் கிடைக்க வேண்டும் என்ற சிந்தனையோடு எம்.எஸ் தெளபீக் அவர்கள் செயற்பட்டு வருகின்றமையிட்டு தெரிவு செய்யப்பட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றனர்.
தெரிவு செய்யப்பட்ட 3850 பேரின் மனோநிலையை புரிந்து கொண்டு நாங்கள் முகநூலிலும், நேரடியாகவும் கோரிக்கைகளை விடுத்த போது எமக்கு உதவி செய்தவர்கள் விரல் விட்டு எண்ணக் கூடிய சில பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே. அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தெளபீக் அவர்கள் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் நியமனத்தை விரைவாக பெற்றுக் கொடுக்க தன்னால் முடியுமான முயற்சிகளை எதிர்வரும் காலங்களிலும் செய்ய வேண்டுமென அகில இலங்கை தெரிவு செய்யப்பட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர் சங்கம் சார்பாக வினயமாக கேட்பதோடு ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்ரஸ் தலைவர் அமைச்சர் ரவுப் ஹக்கீம் அவர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தெளபீக் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை 3850 குடும்பங்கள் சார்பாக தெரிவித்து கொள்கிறோம்.
விளையாட்டு பயிற்றுவிப்பாளர் சங்கம்
No comments:
Post a Comment