விமானத்தை அனுப்பி நாயை எடுத்து வந்தவரை ஜனாதிபதி வேட்பாளராக்க எதிரணி முயற்சி - அமைச்சர் சம்பிக ரணவக்க - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 29, 2019

விமானத்தை அனுப்பி நாயை எடுத்து வந்தவரை ஜனாதிபதி வேட்பாளராக்க எதிரணி முயற்சி - அமைச்சர் சம்பிக ரணவக்க

சூரிஜ் நகருக்கு விமானம் அனுப்பி வீட்டில் வளர்ப்பதற்காக நாயொன்றை எடுத்து வந்தவரையே ஜனாதிபதி வேட்பாாளராக நிறுத்த எதிரணி தயாராவதாக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்தார்.

பதுளை பஸ்தரிப்பிட நிர்மாணப்பணிகளை பார்வையிடுவதற்காகச் சென்ற அமைச்சர் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்தார். 

நாட்டைக் கட்டியெழுப்ப நிர்வாகத்தை தங்களிடம் ஒப்படைக்குமாறு சிலர் கூறுகின்றனர். 1998 முதல் 10 வருடங்களில் ஈட்டப்பட்ட 14,000 மில்லியன் இலாபத்துடனே ஸ்ரீலங்கன் விமான நிலையம் மஹிந்த ராஜபக்ஷ, கோத்தபய ராஜபக்ஷ ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

நாட்டை கட்டியெழுப்புவதாகற்காக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தயாராகும் நபர்களின் நிர்வாகத்தின் கீழே விமான சேவைக்கு 250 மில்லியன் நஷ்டம் ஏற்பட்டது.

மக்கள் வராத மாநாட்டு மண்டபங்கள், விமானம் வராத விமான நிலையங்கள், கிரிக்கெட் விளையாடாத கிரிக்கெட் மைதானங்கள், பெருமைக்காக கட்டிய துறைமுகங்கள் அமைத்தவர்கள் போன்று நாம் நாட்டை நாசம் செய்யவில்லை.

ஜனாதிபதி வேட்பாளர் என்று கூறிக் கொள்ளும் நபரின் வீட்டிற்கு நாய் ஒன்றை எடுத்த வர சூரிஜ் நகரிற்கு விமானம் அனுப்பப்பட்டது. இவர்கள் தான் இன்று ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட சிறந்த முகாமைத்துவ நிபுணர்கள் போன்று தம்மை கூறிக் கொள்கிறார்கள். இவர்கள் தான் விமான சேவையை நாசமாக்கினார்கள். இதன் பலனை இன்று அனுபவிக்க நேரிட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment