களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொட்டுபொல சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் துப்பாக்கி ஒன்றுடன் இன்று (03) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜனவரி முதலாம் திகதி 10.35 மணியளவில் காரில் வந்த ஒருவர் பாதையில் ஓரத்தில் இருந்த ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளார்.
துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நபர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். களுத்துறை பகுதியை சேர்ந்த 57 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டார்.
பல வருடமாக இருந்த பிரச்சினையின் காரணமாக இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் களுத்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment