யாழ்ப்பாணம், முகமாலையில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் வேன் ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் காயமடைந்த இருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொலிஸ் அதிகாரி என்.எல்.ஐயதிலக்க தெரிவித்தார்.
இன்று அதிகாலை 4.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முகமாலை, ஏ09 வீதியில் போக்குவரத்து பொலிஸார் டிப்பர் வாகன மொன்றை இடைமறித்து சோதனையிட்டுக் கொண்டிருந்தனர்.
இதன்போது கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்தினை நோக்கி வந்து கொண்டிருந்த வேன் ஒன்று தரித்து நின்ற டிப்பரின் பின்பக்கமாக மோதி விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாகன ஓட்டுனரான மீசாலையை சேர்ந்த நிமலரூபன் எனும் 26 வயது மதிக்கத்தக்க இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான்.
இதில் தென்மராட்சியின் பிரபல வாகன உரிமையாளர் கந்தையா மற்றும் எழாலையை சேர்ந்த சந்திரமூர்த்தி சுபாஸ்கரன் என்ற இருவரும் காயமடைந்தாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொழும்பில் இருந்து புதிதாக வேன் ஒன்றினை கொள்வனவு செய்து மீசாலைக்கு எடுத்துவரும் வழியிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ். ரமணன்
No comments:
Post a Comment