ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கைப்பற்றிய மொரட்டுவ மாநகர சபையில், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 4 உறுப்பினர்கள் பொதுஜன பெரமுனவுடன் கைகோர்த்து ஆளும் கட்சியில் இன்று இணைந்துள்ளனர்.
டீ.எம். சுமித் புஷ்பகுமார, ரந்து விஜசூரிய, நாலினி பெர்ணான்டோ மற்றும் தீபா ஆரியவங்ச ஆகியோரே இவ்வாறு கூட்டிணைந்துள்ளனர்.
23 ஆளுங்கட்சி உறுப்பினர்களைக் கொண்ட மொரட்டுவ மாநகர சபையில் தற்போது ஆளுங்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.
மொரட்டுவ மாநகர சபையில் ஐக்கிய தேசிய கட்சியின் 16 உறுப்பினர்களும் மக்கள் விடுதலை முன்னணியின் 4 உறுப்பினர்களும் சுயேட்சை குழுவின் உறுப்பினர் ஒருவரும் எதிர்க்கட்சியில் உள்ளனர்.
No comments:
Post a Comment