கேள்வி : அரசாங்கத்தில் உள்ள பல அரசியல்வாதிகள் ஊழல்வாதிகள் என்று கூறப்பட்டுள்ளது. அரசியல் காரணங்களுக்காக அன்றி தனிப்பட்ட இலாபத்துக்காக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கட்சித் தாவல்கள் இதற்குக் காரணமாக இருக்கலாமா?
பதில் : அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவர் மாத்திரமே கட்சி தாவினார் என்று நான் நினைக்கிறேன். அவர் முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலேயே இருந்தவர். கடந்த தேர்தலின் போது அவர் ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்ந்து கொண்டார். ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்குத் தெரிவானார். கட்சி தாவிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ. அவரும் முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்தவர். இதற்கும் கட்சித் தாவலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
அனைத்து அமைச்சர்களும் ஊழல்வாதிகள் என்பதற்கு எந்த உறுதியான சான்றுகளும் இல்லை. எந்தவொரு நம்பிக்கை மிகுந்த விசாரணையிலும் எந்தவொரு அமைச்சரவை அமைச்சர் மீதும் இவ்வாறான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. அவ்வாறு அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் ஊழல்வாதிகள் என்று கூறுவது முடிவானதல்ல.
கேள்வி : ஜனாதிபதிக்கும் புதிய அரசாங்கத்துக்குமிடையில் ஏற்பட்டுள்ள இணக்கம் நாட்டின் முன்னேற்றத்துக்கு உதவுமா?
பதில் : அரசியல் புரிந்துணர்வு மற்றும் கொள்கைகளின் அடிப்படையில் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட நாம் தயாராகவே உள்ளோம். ஆனால் நாம் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கமாகவே செயற்படுவோம். ஜனதிபதியே அரசாங்கத்தினதும் அமைச்சரவையினதும் தலைவராவார்.
ஆனால் ஜனாதிபதி 19ம் திருத்த சட்டத்தில் அவருக்கு உள்ள அதிகாரங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஜனாதிபதியிடம் இருந்து பொறுப்பான அரசியல் நிலைப்பாடு இருக்குமானால் நாம் அவருடன் இணைந்து நாட்டின் மேம்பாட்டுக்காக செயற்பட முடியும்.
கேள்வி : ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து அரசாங்கத்துக்கு தாவும் உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவி கொடுக்கப்படக் கூடாது என்ற ஜனாதிபதியின் தீர்மானம் காரணமாக அங்கிருந்து தாவுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கருதுவது சரியானதா?
பதில் : ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள 7 பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கத் தயாராக உள்ளனர். இவ்விடயம் தொடர்பாக அவர்கள் விரைவிலேயே தீர்மானம் எடுப்பார்கள் என்று தெரிகிறது. எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் போது இவர்கள் தமது ஆதரவினை தெரிவிக்கக் கூடும்.
அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவி முக்கியமல்ல. எந்தவொரு பதவியையோ ஏனைய சலுகைகளோ இல்லாமல் மேற்படி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களில் அதிகமானோர் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கத் தயாராக உள்ளனர்.
கேள்வி : அடுத்த வருடம் ஏப்ரல் தேர்தலுக்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாராக உள்ளதா?
பதில் : ஏப்ரல், மேயில் தேர்தலுக்குச் செல்ல ஐக்கிய தேசியக் கட்சிக்கு அவசியம் எதுவுமில்லை. அடுத்த ஜனவரி முதல் பாரிய அபிவிருத்திக்கு செயற்பாடுகளில் இறங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அடுத்த ஜனாதிபதித் தேர்தல் வரை இந்த அரசாங்கம் தொடரும். ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் 2020 பெப்ரவரியளவில் பாராளுமன்றம கலைக்கப்படலாம்.
'ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படத் தயாராக உள்ளது. அரசியல் புரிந்துணர்வு மற்றும் அரசாங்கத்தின் கொள்கைகளின் அடிப்படையில் இந்தச் செயற்பாடு அமையும். ஆனால் ஜனாதிபதி தரப்பில் பொறுப்பு வாய்ந்த அரசியல் நடவடிக்கைகள் இடம்பெற வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு இடம்பெற்றால் அது நாட்டுக்கு நன்மை பயப்பதாக அமையும்' என்று டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஜித் பி. பெரேரா வழங்கியுள்ள பேட்டியில் கூறினார்.
'ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படத் தயாராக உள்ளது. அரசியல் புரிந்துணர்வு மற்றும் அரசாங்கத்தின் கொள்கைகளின் அடிப்படையில் இந்தச் செயற்பாடு அமையும். ஆனால் ஜனாதிபதி தரப்பில் பொறுப்பு வாய்ந்த அரசியல் நடவடிக்கைகள் இடம்பெற வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு இடம்பெற்றால் அது நாட்டுக்கு நன்மை பயப்பதாக அமையும்' என்று டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஜித் பி. பெரேரா எமக்கு வழங்கியுள்ள பேட்டியில் கூறினார்.
கேள்வி : ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடனான தேசிய அரசாங்கம் இன்னும் உயிர்ப்புடன் உள்ளதா?
பதில் : பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மூல மசோதா அவ்வாறுதான் கூறுகிறது. எனினும் எதிர்க் கட்சியில் இருந்து ஒருவரையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து ஒருவரையும் எடுத்து தேசிய அரசாங்கம் அமைப்பது தேசிய அரசாங்கத்தை அமைக்கும் சரியான முறை அல்ல. நம் உண்மையான தேசிய அரசாங்கத்தை அமைப்பதாக இருந்தால் குறைந்த பட்சம் 15 முதல் 20 உறுப்பினர்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து எடுக்கவேண்டும். எதிர்காலத்தில் மேலும் பலர் அங்கிருந்து வரும் சாத்தியம் இருப்பதால் தேசிய அரசாங்கத்தை அமைப்பது பற்றி நாங்கள் யோசித்து வருகிறோம்.
கேள்வி : அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கையை 30 ஆக மட்டுப்படுத்தினால் நாட்டுக்கு நன்மையாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா? அமைச்சரவையின் எண்ணிக்கையை அதிகரிப்பதால் பொதுமக்கள் பணத்தில் அரசியல்வாதிகள் பயன் பெறுகின்றனர் என்று பொதுமக்களின் கருத்தாக உள்ளது. இதுபற்றி என நினைக்கிறீர்கள்?
பதில் : 30 அமைச்சர்கள் என்ற எண்ணிக்கை சரியாக இருக்கும் என்றுதான் நான் நினைக்கிறேன். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் நாம் இடம் தரலாம். ஆனால் இதற்கு சில சிரேஷ்ட ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் தமது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும். கட்சியினதும் நாட்டினதும் நன்மை கருதி அவர்கள் இதனைச் செய்யலாம். இது பற்றித்தான் நாம் இப்போது கலந்து பேசுகிறோம்.
கேள்வி : இலஞ்சம், ஊழல் மற்றும் ஏனைய பொருளாதாரக் குற்றங்களை இழைத்தவர்களை தண்டிக்க நல்லாட்சி அரசாங்கம் தவறி விட்டது என்று மக்கள் குறை கூறுகிறார்களே... அது பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில் : முன்னைய அரசாங்கத்தில் இவ்வாறான குற்றங்களை இழைத்தவர்கள் தொடர்பாக 120க்கு மேற்பட்ட விசாரணைகளை நாம் நடத்தி முடித்துள்ளோம். அத்துடன் மேல்நீதிமன்றத்தில் 20 வழக்குகள் இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ளன. முன்னாள் அமைச்சு செயலாளர் ஒருவர் மீதான விசாரணை ஏற்கனவே நிறைவு பெற்றுள்ளதுடன் அவர் மீது குற்றமும் சாட்டப்பட்டுள்ளது. எனினும் சட்டநடைமுறை மிகவும் மெதுவாகவே இடம்பெறுகிறது. அதனால்தான் நாம் நீதிமன்றங்களை அமைத்தோம்.
உதித குமாரசிங்க - SUNDAY OBSERVER
No comments:
Post a Comment