சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் சேவையாற்றுகின்ற முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படாது. அவர்களுக்கு பாதுகாப்பு அமைச்சினூடாக வழங்கப்படும் சம்பளத்தை கல்வித்திணைக்களத்தின் ஊடாக வழங்க நடவடிக்கை எடுத்து அவர்களை கல்வித்திணைக்களத்தின் கீழ் கொண்டுவருவதே எமது நிலைப்பாடு என தெரித்த பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா, அம் முன்பள்ளி ஆசிரியர்களை தொடர்ந்து சேவையில் இணைக்கவே நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம் எனவும் தெரிவித்தார்.
சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் பணிபுரியும் முன்பள்ளி ஆசிரியர்களை சாந்தி சிறிஸ்கந்தராஜா எம்.பி சந்தித்து கலந்துரையாடினார். இதன்போதே இவ் உறுதிமொழி வழங்கப்பட்டது.
சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் பணிபுரியும் முன்பள்ளி ஆசிரியர்களை நிறுத்துமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்திருப்பதாகவும் இதனால் தாம் தொழில் இழக்கும் நிலை உருவாகியிருப்பதாகவும் முன்பள்ளி ஆசிரியர்கள் கடந்த வாரம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
துணுக்காய் நந்தகுமார் நகரில் உள்ள முன்பள்ளியில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சாந்தி சிறிஸ்கந்தராஜா எம்.பி,.
சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் சேவையாற்றும் முன்பள்ளி ஆசிரியர்கள் தொடர்பாக பல தவறான முடிவுகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொள்கிறது என்று ஊடகங்கள் வாயிலாக பல தவறான செய்திகள் கிடைக்கப்பெறுகின்றன
இன்று நான் முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய், மாந்தை கிழக்கு, ஒட்டுசுட்டான் கோட்டங்களை சேர்ந்த சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் சேவையாற்றுகின்ற முன்பள்ளி ஆசிரியர்களை சந்தித்தேன்.
இதன்போது இந்த சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் சேவையாற்றுகின்ற முன்பள்ளி ஆசிரியர்கள் தொடர்பான தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என்பதையும் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறோம் என்பது தொடர்பாகவும் அவர்களுக்கு தெளிவு படுத்தியபோதுதான் ஊடகங்களில் வெளிவந்த செய்திகள் தவறானவை என்பது அவர்களுக்கு விளங்கியது.
தாங்கள் முற்றுமுழுதாக கல்வி திணைக்களத்தோடு இணைந்து சேவையாற்றுவதற்கு அவர்கள் தமது விருப்பத்தை தெரிவிக்கின்றனர். கல்வித்தினைக்களத்தின் கீழ் சேவையாற்ற சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அவர்கள் 2 வருட பட்டப்படிப்பை முடித்திருக்கிறார்கள்.
அவர்களை சேவையில் இணைக்கும் போது வயது உள்ளிட்ட காரணங்களால் புறக்கணிக்ககூடாது என்பதனை அவர்கள் கோரிக்கையாக தெரிவிக்கின்றனர். எனவே அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஒருபோதும் செயற்படாது என அவர் உறுதியாக தெரிவித்தார்.
No comments:
Post a Comment