முன்னாள் கூட்டுறவு மற்றும் வர்த்தக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ அமைச்சராக இருந்த போது தனது சொத்து விபர அறிக்கையை சமர்பிக்காததன் காரணமாக குற்றமிழைத்துள்ளதாக தெரிவித்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான தீர்ப்பு ஜனவரி 29ம் திகதி வழங்கப்படும் என்று கொழும்பு நீதவான் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கு இன்று (02) விசாரணைக்கு வந்த போது பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதன்போது வழக்குடன் தொடர்புடைய எழுத்து மூல அறிக்கை இன்று நீதிமன்றில் சமர்பிக்கப்பட்டது. விடயங்களை ஆராய்ந்த நீதவான் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
2010 முதல் 2014ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அமைச்சராக இருந்த முன்னாள் கூட்டுறவு மற்றும் வர்த்தக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தனது சொத்து விபர அறிக்கையை சமர்பிக்காததன் காரணமாக இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்திருப்பதாக கூறி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment