இலங்கைக்கு வருகை தந்துள்ள ஹொங் கொங் முதலீட்டாளர் குழுவினர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்துப் பேசியுள்ளனர்.
திருகோணமலையில் நேற்றையதினம் (05) இந்தச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது திருகோணமலை உத்தேச அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் திருகோணமலையில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை குறித்த சந்திப்பில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ரோஹித போகொல்லாகமவும் கலந்துகொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment