யாழ்ப்பாணம் - மானிப்பாய் வீதியில் இடம்பெற்ற கேரள கஞ்சா விற்பனை தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருக்கையில் நேற்று மாலை சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். மானிப்பாய் பகுதியை சேர்ந்த குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 41 கிலோ 530 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபர்களை யாழ்ப்பாணம் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment