எலும்புக்கூடு மாதிரிகளை ஜனவரி 30 இல் புளோரிடாவுக்கு அனுப்ப ஏற்பாடு - சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ ​தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, January 3, 2019

எலும்புக்கூடு மாதிரிகளை ஜனவரி 30 இல் புளோரிடாவுக்கு அனுப்ப ஏற்பாடு - சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ ​தெரிவிப்பு

மன்னார் மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் காபன் பரிசோதனைக்காக எதிர்வரும் 30 ஆம் திகதி புளோரிடாவிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக அகழ்வுப் பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மன்னார் மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் கடந்த 10 தினங்களாக இடை நிறுத்தி வைக்கப் பட்டிருந்த நிலையில் நேற்று புதன்கிழமை 122 அவது நாளாக அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகின.

சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இப்பணிகள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்.

அகழ்வுப்பணிகள் நேற்றுமுன்தினம் இடம் பெறவில்லை.காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட மழை காரணமாக இந்த அகழ்வுப் பணிகள் பாதிக்கப்பட்டன.

இந்நிலையில் அவற்றை சீர் செய்து அகழ்வு நடைபெறும் பகுதியைச் சுற்றி மறைப்பு வேலி அமைக்கப்படுகின்றன. மன்னார் நீதவானுடன் நேற்றுமுன்தினம் இது பற்றிக் கலந்துரையாடப்பட்டதுடன் அகழ்வுப் பணிகளிலுள்ள வீதிகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இதுவரை கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக் கூடுகளின் மாதிரிகள் காபன் பரிசோதனைக்காக புளோரிடாவுக்கு இம்மாதம் மாதம் 30 ஆம் திகதி அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இதன்போது மரணம் தொடர்பிலும் ஏனைய விடயங்கள் தொடர்பாகவும் அறிந்து கொள்ள முடியும் என்றார்.இதுவரை கண்டெடுக்கப்பட்ட 280 மனித எலும்புக்கூடுகளில் 274 மனித எலும்புக் கூடுகள் மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளில் 20 சிறுவர்களுடையது எனவும் நம்பப்படுகின்றது.

No comments:

Post a Comment