19 வயதுக்குட்பட்டோர் அணியில் மீண்டும் மொஹமட் சமாஸ் - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 2, 2019

19 வயதுக்குட்பட்டோர் அணியில் மீண்டும் மொஹமட் சமாஸ்

இலங்கை கிரிக்கெட் 19 வயதுக்குட்பட்டோர் அணியில் மொஹமட் சமாஸ் இடம்பிடித்துள்ளார்.

சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அவுஸ்திரேலிய 19 வயதின் கீழ் அணிக்கெதிரான 15 பேரைக்கொண்ட இலங்கை குழாமிலேயே அவர் இவ்வாறு இணைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று (02) வெளியிடப்பட்ட குறித்த பெயர்ப்பட்டியலில் இலங்கை 19 வயதின் கீழ் அணியின் தலைவராக வென்னப்புவ ஜோசப் வாஸ் கல்லூரியின் துடுப்பாட்ட வீரர் நிபுன் தனஞ்சய அறிவிக்கப்பட்டுள்ளார்.

இரு அணிகளும் 3 ஒருநாள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டிகளுக்கான இலங்கை குழாமில் கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் முன்வரிசை துடுப்பாட்ட வீரர் மொஹமட் சமாஸ் மீண்டும் பெயரிடப்பட்டுள்ளார்.

ஏற்கனவே நடைபெற்று முடிந்த பங்களாதேஷ் 19 வயதின் கீழ் அணிக்கெதிரான தொடரிலும் இடம்பெற்றிருந்த சமாஸ் இத்தொடரிலும் தனக்கான இடத்தை தக்க வைத்தமை சிறப்பம்சமாகும்.

இது தவிர துடுப்பாட்டத்தில் அண்மைக்காலமாக சிறப்பாக செயற்பட்டு வரும் காமிர் மிஷார மற்றும் நவோத் பரணவிதான ஆகியோரும் இக்குழாமில் இடம்பெற்றுள்ளனர்.

இக்குழாமில் இடம்பெற்றுள்ள வீரர்கள் 2020 இளையோர் உலகக்கிண்ண தொடருக்காக தகுதி பெறுவார்கள் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இப்போட்டிகளில் பங்கு கொள்ளும் அவுஸ்திரேலிய அணி கடந்த 31 ஆம் இலங்கை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது. 

இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் போட்டிகள் பி. சரவணமுத்து ஓவல் மைதானத்தில் ஜனவரி 03, 05 மற்றும் 07 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதுடன் டெஸ்ட் போட்டி இம்மாதம் 10 - 12 ஆம் திகதிகளில் SSC மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை குழாம்
நிப்புன் தனன்ஜய (தலைவர்),
நவோத் பரணவித்தாரன,
சோனால் தினுஷ,
காமில் மிஷார,
மொஹமட் சமாஸ்,
ரவீன் டி சில்வா,
தவீஷ அபிஷேக்,
அவிஷ்க தரிந்து,
லக்ஷான் கமகே,
சமிந்து விஜேசிங்க,
ப்ரவீன் நிமேஷ்,
டில்ஷான் மதுசங்க,
அஷான் டேனியல்,
ரொஷேன்சன்ஜய
டிலும் சுதீர

போட்டி அட்டவணை
1 ஆவது ஒருநாள் போட்டி - ஜனவரி 03, பி.சரா ஓவல்
2 ஆவது ஒருநாள் போட்டி - ஜனவரி 05, பி.சரா ஓவல்
3 ஆவது ஒருநாள் போட்டி - ஜனவரி 07, பி.சரா ஓவல்

மூன்று நாள் கொண்ட டெஸ்ட் போட்டி – ஜனவரி 10 - 12, எஸ்.எஸ்.சி

No comments:

Post a Comment