ஞானசார தேரரை வீரர் என்கிறார் அஷ்வின் விராது தேரர்! - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 2, 2019

ஞானசார தேரரை வீரர் என்கிறார் அஷ்வின் விராது தேரர்!

“இனத்துக்காக தமது வாழ்வை தியாகம் செய்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரராகிய உங்களை, மக்கள் வீரராக போன்றுவார்கள்” என பர்மாவிலுள்ள 969 என்ற பௌத்த அமைப்பின் தலைவர் அஷ்வின் விராது தேரர் தெரிவித்துள்ளார்.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு விசேட கடிதமொன்றை அஷ்வின் விராது தேரர் அனுப்பியுள்ளதாக கொழும்பு நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அக்கடிதத்திலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கடித்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“தேசிய போராட்டத்திற்காக உங்களது வாழ்வையும், சுதந்திரத்தையும் ஆபத்தில் இட்டுள்ளதையிட்டு நான் பெருமையடைகின்றேன்.

அந்தவகையில் இனத்துக்காக தமது வாழ்வை தியாகம் செய்பவர்கள் மீது மக்கள் மிகுந்த அன்பு செலுத்துவதுடன் வீரர் என்றும் போற்றுவார்கள். ஆகையால், உங்களை சிறையில் அடைத்துள்ளதையிட்டு கவலையடையாமல் அதற்காக பெருமையடையுங்கள்.

மேலும் சத்தியத்துக்காக முன்னிற்பவர்கள் இறுதியில் நிச்சயம் வெற்றியடைவார்கள். நீங்களும் உங்களது போராட்டத்தில் வெற்றி பெறுவீர்கள்” என அஷ்வின் விராது தேரர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment