அண்மையில் நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் விடிவுக்காக பாரிய பங்களிப்புகளை செய்துள்ளது, மாறாக அமைச்சுப் பதவிக்கு ஆசைபட்டல்ல என தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரட்ன சிங்கம் தெரிவித்தார்.
திருகோணமலை மனையாவெளி சன சமூக நிலையத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்ட முதியோர்கள் மற்றும் சாதனை புரிந்த மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
திருகோணமலை நகராட்சி மன்றத்தின் தவிசாளர் நாகராசா இராச நாயகம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சன, சமூக நிலைய தலைவர் ஆர். ரெட்ன ஜோதி, சன சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் முரளிதரன், நகராட்சி மன்ற உறுப்பினர், திருமதி, விஜய தர்ஷினி மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்ந்தும் பேசுகையில் கூறியதாவது, தற்போது எதிர் தரப்பினர்கள் பல பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். எமது தலைவர் இரா சம்பந்தனுக்கு அமைச்சுப் பதவிகளை எடுப்பதற்கு எந்த ஆசையும் இல்லை.
அதேபோன்று நாங்கள் ரணில் விக்கிரமசிங்கவிடம் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் வதந்திகளை பரப்பித்திரிகிறார்கள். ஆனால் அந்த வதந்தியில் எவ்வித உண்மைகளும் இல்லை. திருமலை மாவட்டத்தில் அதிகமான மாணவர்கள் இம்முறை சித்தி பெற்றுளனர். அனைத்து மாணவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
No comments:
Post a Comment