மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சிற்கு உட்பட்ட ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 2019ம் ஆண்டுக்கு புதிய பயிலுனர்களை சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.
16 வயது தொடக்கம் 25 வயது வரையிலான பாடசாலையை விட்டு விலகிய இளைஞர், யுவதிகள் இதற்காக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் எதிர்வரும் 28ம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும். 6 மாத பயிற்சி மற்றும் ஒரு வருட பயிற்சி நெறிகளுக்ககென விண்ணப்பிக்க முடியும்.
பயற்சிநெறிகள் தமிழ், ஆங்கில மொழிகளில் இலவசமாக வழங்கப்படும். பயிற்சியின் பின்னர், அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் மேலதிக பயிற்சிகள் வழங்கப்படும்.
இந்த பயிற்சி நிலையத்தில் பயிற்சிகளைத் தொடர்வோருக்காக தூர இடங்களில் இருந்து வரும் பயிலுனர்களுக்கு தங்குமிடவசதி, உணவு வசதிகளும் இலவசமாக வழங்கப்படும்.
வதிவிட முகாமையாளர், தொண்டமான் தொழில் பயிற்சி நிலையம், ஹட்டன் என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப முடியும். இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு 051-22-22-762 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும்.
No comments:
Post a Comment