நாடாளுமன்றத்தைக் கலைத்து உடனடியாக பொதுத் தேர்தலை நடத்தக் கோரி ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவின் ஏற்பாட்டில் கையெழுத்து வேட்டை நடத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 50 இலட்சம் கையொப்பம் பெறும் நிகழ்வின் மற்றொரு கட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புத்தளம், மதுரங்குளி நகரில் இடம் பெற்றது.
இதன்போது பொதுத் தேர்தலை நடத்தக் கோரும் துண்டு பிரசுரங்கள் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்களினால் விநியோகிக்கப்பட்டதுடன், ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன கட்சியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பொது மக்கள் இதன்போது தமது கையொப்பங்களை இட்டிருந்தனர்.
அங்கு பெறப்பட்ட கையொப்பங்கள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் தேசிய தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment